news Breaking News
clock

'புளித்து போன காமெடி பண்ணாதீங்க'... ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

'புளித்து போன காமெடி பண்ணாதீங்க'... ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என்று இந்திப் பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, தி.மு.க.வின் இந்தித் திணிப்பு அரசியல் ஒரு "புளித்துப் போன காமெடி" என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திருச்சி ரயில்வே அலுவலகப் பெயர்ப் பலகை தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர். இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க அரசு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் அடிப்படையில், இந்திப் பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான செயலில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே EPFO அலுவலகங்களில் 'பவிஷ்ய நிதி பவன்' என்றும், குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருத பெயர்களையும், நீர்வளத்துறைக்கு 'ஜல் சக்தி' என்றும் பெயர் மாற்றம் செய்திருப்பதை முதல்வர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். உடனடியாக அங்குச் சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும்; இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%