சீர்காழி உடையார் கோயிலில் அன்னாபிஷேகம்

சீர்காழி உடையார் கோயிலில் அன்னாபிஷேகம்


 

சீர்காழி , நவ , 06 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஈசான்ய பாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாஹீஸ்வரி உடனாகிய ஸ்ரீ பதினென்புரானேஸ்வரர் ( உடையார் கோயில் ) ஆலயத்தில்  தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் நல்லாசியுடன் ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு  அன்னாபிஷேகம் மதியம் 1.00 மணியளவில் நடைப்பெற்றது. 

பக்த கோடிகளும், மெய்யன்பர்களும் வருகை தந்து தரிசித்து உடையார் புரானேஸ்வரர் திருவருளை பெற்றார்கள். சீர்காழி 14-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜெயந்திபாபு , தி.மு.க. பிரமுகர் எஸ்.என்.கே. பாபு ஆகியோர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%