வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி

வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி

வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வலங்கைமான் ஒன்றிய அளவிலான வினாடி வினா போட்டி நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் தெய்வ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. வினாடி வினா போட்டியை ஒருங்கிணைத்து நடுவர் பொறுப்பேற்று திருவாரூர் தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் சிறப்பாக நடத்தி தந்தார். வலங்கைமான் ஒன்றிய செயலாளர் நிர்மல், ஒன்றிய பொருளாளர் பிராபகரன், மாவட்ட இணை செயலாளர் விஜய், வானவியல் மன்ற கருத்தாளர் புவனகிரி ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்திருந்தனர். வினாடி வினா போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களை வாழ்த்தி வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, குமரேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் விஜயபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:-

இளநிலை 

1) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வடக்கு பட்டம்,

2) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தென்கரை ஆலத்தூர்.


இடைநிலை 

1) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வலங்கைமான்.

2) அரசு மேல்நிலைப் பள்ளி, கோவிந்தகுடி.

மேல்நிலை 

1) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வலங்கைமான்.

2) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வலங்கைமான்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%