
திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் அறிவுரையின்படி, சுமார் *ஒரு கோடி பனை விதைகள்* நடும் முயற்சியில் திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் தீவிர முயற்சியால் *சுமார் 10,000 பனை விதைகள்* திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களில் தலைவர் *திரு.K S.S. தியாகபாரி* அவர்கள் மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் *திரு நடனம்*, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர் *திரு கோ .வெங்கடேஸ்வரன்* அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இந்நிகழ்வில் நிர்வாக குழு உறுப்பினர் *டாக்டர் T . சிவரஞ்சனி* பள்ளியின் தலைமை ஆசிரியர் *திரு.S. அகிலன்*, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் *திரு K.இளங்கோவன்*. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் *திரு.M. கணேசன்*, இப்பனை விதை சேகரிப்பில் பெரும் தொண்டாற்றிய முதுகலை ஆசிரியர் *திரு. G. ராஜேந்தர்* சமூக அறிவியல் மன்ற பொறுப்பாளர் *திரு.N. ராஜு* மற்றும் சேவை திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்பணை விதைகள் இன்று முதல் ஆற்றின் கரை பகுதிகள் மற்றும் நீர் நிலைகளின் கரை ஓரங்கள், உள் வாய்க்கால்களின் கரை பகுதிகள் ஆகியவற்றில் பதியம் செய்யப்பட உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?