சூடான் உள்நாட்டுப்போர் மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதாக அறிவிப்பு

சூடான் உள்நாட்டுப்போர் மூன்று மாதங்களுக்கு நிறுத்துவதாக அறிவிப்பு

சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் ப்போர் மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நிறுத்துவதாக துணை ராணுவ தளபதியான மொஹமத் ஹம்டான் டகாலோ அறிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தத்தை சூடான் ராணுவ தளபதி அப்துல் ஃபத்தாஹ் அல்-புர்ஹான் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக எகிப்து, சவூதி அரேபியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடு களின் மூலம் மத்தியஸ்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகம் சூடான் துணை ராணு வத்துக்கு கள்ளச்சந்தை மூலமாக ஆயு தங்கள் கொடுத்து உதவி வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலை யில் அந்நாடு பேச்சுவார்த்தைக் குழுவில் இருப்பதால் அது குறித்து கேள்வி எழுப்பியதுடன், பேச்சுவார்த்தையை நிராகரிப்பதாக சூடான் ராணுவ தளபதி அப்துல் ஃபத்தாஹ் அறிவித்திருந்தார். மேலும் இத்திட்டம் மிக மோச மான திட்டம். இந்த ஒப்பந்தம் ராணு வத்தின் இருப்பை நீக்கிவிடும் அனைத்து பாதுகாப்பு நிறுவனங் களையும் கலைத்துவிடும் என்று விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக துணை ராணுவ தளபதி மொஹமத் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உமர் அல் பஷீர் தலைமையிலான ஆட்சியை சூடான் ராணுவமும் துணை ராணுவமும் இணைந்து கவிழ்த்தன. அதன் பிறகு ராணுவத் தளபதி அப்துல் ஃபத்தாஹ் மற்றும் துணை ராணுவத் தளபதி மொஹமத் ஹம்டான் ஆகியோருக்கு இடையே ஆட்சிக்கு யார் தலைமை வகிப்பது என்ற அதிகாரப்போட்டி ஏற்பட்டு அது உள்நாட்டுப்போராக வெடித்தது. இந்த போரின் காரணமாக 1 கோடியே 40 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கொடிய வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். பெண் களும் குழந்தைகளும் துணை ராணு வத்தினரால் பாலியல் வன்கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் கடத்தப்பட்டுள்ளார்கள். பல இடங்களில் துணை ராணுவம் மக்களை படுகொலை செய்துள்ளது. போர் நிறுத்தத்தை ஏற்பதாக துணை ராணுவம் அறிவித்திருந்தாலும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன.

 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%