சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும்: எச்எஸ்பிசி ஆய்வில் தகவல்

சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும்: எச்எஸ்பிசி ஆய்வில் தகவல்

புதுடெல்லி:

கடந்த ஓராண்​டாக பங்கு வர்த்​தகம் மந்​த​மாக இருந்து வரும் நிலை​யில் சென்​செக்ஸ் விரை​வில் 94,000 புள்​ளி​களை தொடும் என்று எச்​எஸ்​பிசி தெரி​வித்​துள்​ளது.


இதுகுறித்து எச்​எஸ்​பிசி ஆய்​வாளர் ஹெரால்டு வான் டெர் லிண்டே கூறிய​தாவது: கடந்த 2024 செப்​டம்​பரிலிருந்து இந்​திய பங்​குச் சந்​தைகள் மிகப்​பெரிய அளவில் பலவீன​மான நிலை​யில் இருந்து வரு​கிறது. உலக சந்​தைகளு​டன் ஒப்​பிடு​கை​யில் இந்​திய சந்​தை​யின் செயல்​பாடு மோச​மாக உள்​ளது. ஆனால், இந்த நிலை நீண்ட நாள் நீடிக்​காது என்​பது ஆய்​வு​களின் மூலம் தெரிய​வந்​துள்​ளது.


உள்​நாட்டு கொள்​கைகள் வளர்ச்​சிக்கு ஆதர​வான வகை​யில் உள்​ளன. அதேபோன்​று, வரி​கள் குறைக்​கப்​பட்​டது மக்​களின் நுகர்வை அதிரி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால், நிறு​வனங்​களின் வரு​வாய் மேம்​பட்டு விரி​வாக்க திட்​டங்​கள் மற்​றும் வேலை​வாய்ப்பு கணிச​மான அளவில் உயரும்.


பணவீக்​கத்​துக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து ரிசர்வ் வங்​கி​யும் அதன் கொள்​கை​களில் அவ்​வப்​போது தளர்​வு​களை அறி​வித்து வரு​வதும் முக்​கிய முன்​னேற்​ற​மாக பார்க்​கப்​படு​கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் வரி​வி​திப்​பால் சந்தை ஏற்​கெனவே இடர்​பாட்டை சந்​தித்​துள்ள நிலை​யில் அரசு மற்​றும் ரிசர்வ் வங்கி எடுத்து வரும் சீரிய நடவடிக்​கைகள் பங்​குச் சந்​தை​யின் ஏற்​றத்​துக்கு பெரிதும் கைகொடுக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேலும், அந்​நிய முதலீட்டு வரத்​தும் இந்​தி​யா​வுக்கு சாதக​மாகவே உள்​ளது.


வரும் காலங்​களில் ஏராள​மான அந்​நிய முதலீட்​டாளர்​கள் இந்​திய சந்​தை​யின் பக்​கம் வரக்​கூடும். இது​போன்ற காரணங்​களால், கூடிய விரை​வில் பங்​குச் சந்​தைகள் வேகமெடுத்து சென்​செக்ஸ் 94,000 புள்​ளி​களை எட்​டும் என்​பதே சந்தை நிபுணர்​களின் எதிர்​பார்ப்​பாக உள்​ளது. இவ்​வாறு ஹெரால்​டு தெரி​வித்​துள்​ளார்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%