சென்னையில் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கூறி இளம்பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை

சென்னையில் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கூறி இளம்பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபருக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை


சென்னை, செப். 26–


சென்னையில் இணையதளம் மூலம் அறிமுகமான இளம்பெண்ணுக்கு ஆபாசமாக வீடியோக்களை அனுப்பக் கூறி மிரட்டிய வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமான அவரது ஆண் நண்பர் முகமது ஆசிப் என்பவரிடம் தனிப்பட்ட பதிவுகளை நட்பின் பேரில் பகிர்ந்துள்ளார். முகமது ஆசிப் ஆபாசமாக வீடியோக்களை அனுப்புமாறு அந்த பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டஇளம்பெண் அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தினர்.


சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் ஆ.அருண், நிலுவையிலுள்ள நீதிமன்ற வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி பெற்று தர உத்தரவிட்டதின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ஏ.ராதிகா ஆலோசனையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினர் உரிய விசாரணை முடித்து மேற்படி வழக்கில் சைதாப்பேட்டை,11 வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முறையாக ஆஜர் செய்தும், தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் பெற்ற நிலையில் நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.


இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஆசிப் என்பவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66டி ன் கீழ் 2 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.50,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் சிறைதண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%