பாதி விலையில் தங்கம் தருவதாக அறிவித்து ரூ.60 கோடி மோசடி: தலைமறைவான 4 பேர் கைது

பாதி விலையில் தங்கம் தருவதாக அறிவித்து ரூ.60 கோடி மோசடி: தலைமறைவான 4 பேர் கைது


சென்னை: ​பாதி விலை​யில் தங்​கம் தரு​வ​தாக கவர்ச்​சி​யான திட்​டங்​களை அறி​வித்து ரூ.60 கோடி மோசடி​யில் ஈடு​பட்ட குற்​றச்​சாட்​டில் தலைமறை​வாக இருந்த 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை முகப்​பேரை தலை​மை​யிட​மாகக் கொண்டு ஏஆர்டி ஜுவல்​லர்ஸ் மற்​றும் நிதி நிறு​வனம் இயங்கி வந்​தது. இந்த நிறு​வனம் பாதி விலை​யில் தங்​கம் தரு​வ​தாக​வும், ரூ.1 லட்​சம் முதலீடு செய்​தால் வாரம் 3 சதவீதம் வட்டி உட்பட பல்​வேறு கவர்ச்​சிகர​மான திட்​டங்​களை விளம்​பரப்​படுத்​தி​யது.


இதை நம்பி ஏராள​மானோர் இந்த திட்​டத்​தில் சேர்ந்​தனர். மேலும், இந்​நிறு​வனம் தமிழகம் முழு​வதும் கிளை​களை நிறுவி கோடிக்​கணக்​கில் முதலீடு​களைக் குவித்​தது. ஆனால், உறு​தி​யளித்​த​படி நடந்​து​கொள்​ளாமல் ரூ.60 கோடிவரை மோசடி செய்​த​தாக பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரி​வில் புகார் அளித்​தனர்.


இதுகுறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இந்த நிறு​வனத்தை நடத்தி வந்த சகோ​தரர்​கள் உட்பட பலர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். இதன் தொடர்ச்​சி​யாக, மோசடி வழக்கில் தலைமறை​வாக இருந்து வந்த புழல் பகு​தி​யைச் சேர்ந்த பானுவள்ளி (56), சந்​தோஷ் (35), அம்​பத்​தூரைச் சேர்ந்த சுஜாதா (51), ஆவடியைச் சேர்ந்த திவ்யா (36) ஆகிய 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இவ்​வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். மேலும், இந்த நிறு​வனம் தொடர்​பாக பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரி​வில் புகார் தெரிவிக்​கலாம் என போலீ​ஸார் கேட்​டுக்​கொண்​டுள்​ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%