சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் ரூ. 1.27 கோடி மீட்பு

சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்களில் ரூ. 1.27 கோடி மீட்பு


சென்னை, அக். 7–


சென்னையில் செப்டம்பர் மாதம் 121 சைபர் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1,27,48,074 மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் மூலமாக பல்வேறு சைபர் குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் பொதுமக்களின் புகார்களை 1930 என்ற அவசர அழைப்பு மூலமாக அல்லது நேரடியாக வழங்கப்படும் புகார்களை பெற்று துரிதமாக நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய விசாரணை மூலம் பணம் இழந்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் பணத்தை மீட்டு தர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களின் இணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் அதிகாரிகள் திறம்பட துரிதமாக விசாரணை மேற்கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் (01.09.2025 முதல் 30.09.2025 வரை) சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தாக்கலான 46 புகார் மனுக்கள் பெற்று, 38 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு ரூ.56,12,247/- மீட்கப்பட்டும், இதே போல, வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 20 மனுக்கள் பெறப்பட்டு, 42 புகார் மனுக்களில் ரூ.27,24,239/- மீட்கப்பட்டும், மேற்கு மண்டலத்தில் 34 மனுக்கள் பெற்று, 9 புகார் மனுக்களில் ரூ.21,13,235 மீட்கப்பட்டும், தெற்கு மண்டலத்தில் 55 மனுக்கள் பெற்று, 21 புகார் மனுக்களில் ரூ.12,66,079/- மீட்கப்பட்டும், கிழக்கு மண்டலத்தில் 50 மனுக்கள் பெற்று, 11 மனுக்களில் ரூ.10,32,274/-மீட்கப்பட்டும் மொத்தமாக 205 மனுக்கள் பெற்று, 121 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மொத்தம் பணம் ரூ.1,27,48,074/- மீட்கப்பட்ட உயிரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மேலும் நடப்பு 2025ம் ஆண்டு 30.09.2025 வரை ரூ.21,69,37,186/- மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இழந்த பணத்தை திரும்ப பெற்ற பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%