சென்னையில் டிசிஎஸ், இன்போசிஸ் உள்பட ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Oct 11 2025
11

சென்னை, அக். 10–
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான இன்போசிசுக்கு இன்று காலை அந்நிறுவனத்தின் ஈமெயிலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நிறுவனம் சார்பில் அருகில் உள்ள தாம்பரம், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து தாம்பரத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நிறுவனம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அதேபோல் ஓ.எம்.ஆர் சாலை மேட்டுக்குப்பம் என்ற பகுதியில் உள்ள ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்திற்கும், துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது ஐடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனங்களில் பணியில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?