ஜெ.ஜெ நகர் பகுதியில் மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஒருவர் கைது
Oct 11 2025
105
சென்னை, அக். 10–
சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் ஜெ.ஜெ நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து ஜெ.ஜெ நகர், வெல்கம் இன் ஹோட்டல் வாகன நிறுத்தம் அருகே கண்காணித்து, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த அஸ்வின் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 4.22 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் மற்றும் 1 ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அஸ்வின் கேரளாவில் ஒரு நபரிடமிருந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வாங்கி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அஸ்வின் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?