சென்னை ரெயிலில் கைவிடப்பட்ட 9 மாத குழந்தையை மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர்
Nov 24 2025
13
சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கைவிடப்பட்ட 9 மாத குழந்தையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
22.11.2025 அன்று அதிகாலை, சுமார் 05:20 மணியளவில்,
இன்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை பிரிவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு செய்தி வந்தது, அதில் ரயில் எண். 22640 (ஆலப்புழை – சென்னை எக்ஸ்பிரஸ்) ரயில் பெட்டி எஸ்7–ல் 9 மாத பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, மகளிர் துணை ஆய்வாளர்/சென்னை சென்ட்ரல், தனது குழுவினருடன், காலை 5 மணிக்கு அந்த ரயில் சென்னை சென்ட்ரல் வந்தடைந்ததும், விரைந்து சென்று குழந்தையைப் பாதுகாப்பாக மீட்ட ரெயில்வே பாதுகாப்புப் படையினர், அந்த ரயில் கோயம்புத்தூரை கடந்த பிறகு, எஸ்7 பெட்டியில் 37வது எண் படுக்கையில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டை உறுதி செய்தனர். அந்த குழந்தையின் பெற்றோரைஅனைத்து பெட்டிகளிலும் முழுமையான தேடியபோதும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை அடையாளம் காண மேலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. குழந்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குழந்தை பின்னர் உடனடி பராமரிப்பு, மருத்துவ கவனிப்பு மற்றும் மேலதிக மறுவாழ்வுக்காக சென்னை சென்ட்ரலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?