செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு ராஜ்யபுரஷ்கார் விருதுச் சான்று வழங்கல்:

செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு ராஜ்யபுரஷ்கார் விருதுச் சான்று வழங்கல்:


செய்யாறு கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய சங்கம் சார்பில் ராஜ்யபுரஸ்கார் விருதுச் சான்று வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு கல்வி மாவட்டம் மாவட்ட பாரத சாரண சாரணிய சங்கம் சார்பில் ராஜயபுஷ்கார் விருது சான்று வழங்கும் விழா நேற்று செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் எஸ். செந்தில் முருகன் தலைமை தாங்கி , நிலுவையில் இருந்த ராஜ்ஜிய புரஷ்கார்விருது சான்றுகளை சம்பந்தப்பட்ட சாரண, சாரணிய ஆசிரியர்களிடம் வழங்கி ஆலோசனைகளை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜெ. பாபு வரவேற்று சாரண இயக்க பணிகள் குறித்து பேசினார்.


சாரணர் ,சாரணிய ஆணையர்கள் சுந்தரமூர்த்தி ,லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் குமரவேல், மாவட்ட ஆணையர் (ஏ .ஆர்) கை. செல்வகுமார், மாவட்ட பயிற்சி ஆணையர் வி. லோகநாதன், அமைப்பு ஆணையர் காந்திமதி உள்ளிட்டோர் பேசினர்.


ராஜயபுரஷ்கார் விருதுசான்று அண்மையில் சென்னை விழாவில் வழங்கப்பட்ட நிலையில் விழாவில் கலந்து கொள்ளாத பள்ளிகளுக்கு விருது சான்றிதழ் மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


சாரண, சாரணிய ஆசிரியர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர் .முடிவில் சாரண ஆசிரியர் திருமுருகன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%