ஒரு மேகம் கலைந்து செல்வது போல
என்னை எங்கேயோ தோலைத்துவிட்டேன்
எங்கே என்று
தெரியவில்லை
என் நேசமானவர்களுக்கு
என் வாசம் தெரியும்
சுவாசம் இருக்கிறதா என்பதும் புலப்படும்
எனக்குத்தான் அது ஒன்றும் ஞாபகமில்லை
ஒவ்வொரு மானுட முகங்களிலும்
நான் காண மாட்டேன்
என் அடையாளங்கள் அப்படியாக சொல்லக்கூடியதும் அல்ல
மரக்கிளைகளின் சாயலில்
விழுதுகளால் தாங்கிப் பிடித்தவனாக இருக்கலாம்
ஒருவேளை நான் அமர்ந்திருந்த நதிக்கரையில்
சுற்றித்திரியும் தட்டான்களிடம் விசாரித்துப் பாருங்கள்
ஒரு மழைப்பூச்சியின் கரங்களில் மன்றாடிக்கொண்டிருக்கலாம்
நதியோர நாணல்களில் வருடிக் செல்லும் தென்றலுடன் ஏதாவது கதைத்துக் கொண்டிருப்பேன்
உற்று நோக்கி என்னைச் சிறைப்பிடியுங்கள்
தயவுசெய்து என்னை எந்த ஒரு பூட்டிய வீட்டிலும் யாசிக்காதீர்கள்
நூலகங்களில் உள்ள ஏதோவொரு பழுப்போறிய பக்கத்தில் ஒரு காதுமடிக்கப்பட்ட காகிதமென சில
கவிதை வரிகளைத் தின்று
சீரணித்தவனாக
அடிக்கோடிட்டு பாதுகாப்பாக
உதிரக் காத்திருக்கலாம்❤️
ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?