
வந்தவாசி, அக் 10:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக அஞ்சல் தினவிழா, நாமும் சுற்றுச்சூழலும் விழிப்புணர்வு, தன்னம்பிக்கை பயிலரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வரும், ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், சமூக ஆர்வலர்கள் வி.விஜயகுமார், அ. ஷாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி வரவேற்றார். இந்த நிகழ்வில் அஞ்சலக துறை சார்பாக திருவத்திபுரம் அஞ்சலக ஊழியர் அஞ்சலகம் பற்றியும் , கடித போக்குவரத்து குறித்தும் விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய வாசகங்களை படித்தனர். இந்த நிகழ்வில் பள்ளி
ஆசிரியைகள் பபிதா, சிவகாமி, நிவேதா, கீர்த்தனா, கணினி ஆய்வக பொறுப்பாளர் & பயிற்றுனர் பங்கேற்றனர். அஞ்சல் தினத்தையொட்டி மாணவர்கள் பள்ளியில் இருந்து தங்களது பெற்றோர்களுக்கு கடிதங்களை எழுதினர். இறுதியில் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?