சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்




சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 414 மனுக்கள் வரப்பெற்றன.


மேலும், மாற்றுத்திறனாளி இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கு தொகை, மாற்றுத்திறனாளி விபத்து மரணத்திற்கான ஈமச்சடங்கு தொகை, மாற்றுத்திறனாளியின் மகன், மகள் திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளியின் மகன், மகள் கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கு மூக்கு கண்ணாடி பெறுவதற்கு நிதியுதவி, பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு மகப்பேறு நிதியுதவி ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த 194 பேருக்கு ரூ.43,06,500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு நெப்ட் முறையில் தொகை அனுப்பி வைக்கும் விதமாக விபத்து காரணமாக இறந்த 9 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் 9 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


முன்னதாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், அருநூத்துமலை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பி.கனகராஜ், எம்.ராஜேஸ்கண்ணன் ஆகிய இருவரும் மேல் மூத்தோர் பிரிவுக்கும், 9-ஆம் வகுப்பு மாணவர் சி.மோர்த்தீஸ் இளையோர் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதையொட்டி, மேல் மூத்தோர் பிரிவுகளுக்கான தேசிய அளவிலான ரக்பி போட்டிகள் ஜனவரி முதல் வாரத்தில் டெல்லியிலும், இளையோருக்கான போட்டிகள் ஜனவரி திங்கள் 3-வது வாரத்திலும் ஒடிசா மாநிலத்திலும் நடைபெற உள்ளது. தேசிய அளவிலான ரக்பி போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மூன்று பேரை நேரில் அழைத்து கலெக்டர் இரா.பிருந்தாதேவி வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%