சொக்கப்பனை கொளுத்துவது ஆன்மிகமா ? அறிவியலா?

சொக்கப்பனை கொளுத்துவது ஆன்மிகமா ? அறிவியலா?



நம்முடைய வாழ்வியல் முறைகளை அலசி ஆராய்ந்து பார்க்கும் போது மேலெழுந்தவாரியாக ப் பார்த்தால், ஒரு விளக்கமும் உட் சென்று பார்த்தால் ஆச்சரியப்படக்கூடிய அறிவியல் விளக்கமும் இருக்கும். அந்த வகையில் திருக்கார்த்திகை திரு நாளில் சொக்கப்பனை யை கொளுத்துவது தான்.இதை ஆன்மீக மாகவும் அறிவியலாகவும் அதே நேரத்தில விவசாயத்தில் பூச்சி விரட்டியாக வும் பார்க்கப்படுவது

என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சொக்கப்பனை கொளுத்துவது

ஆன்மீக மே?

திரு கார்த்திகை திருநாளிலும் அதை அடுத்த 2ம், 3ம் நாளில் அனைத்து சிவலாயங்களிலும் பூலோக விருட்ஷமாக கருதப்படும் பனை மரத்தை வெட்டி ஆலயத்தின் முன் முற்றத்தில் நட்டு அதில் சில அடி உயரத்திற்கு பனை ஓலைகளை கொண்டு கூம்பு வடிவில் அமைப்பார்கள் இந்த அமைப்பு " சொக்கப்பனை" என்று அழைக்கப்படும் அது பேச்சு வழக்கில் சொக்கப்பானை" என்று கூறப்படுகிறது.பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாரதனை காட்டிய பின் அந்த தீபச்சுடாரல் " சொக்கப்பனை " யை கொளுத்துவார்கள் அதை ஆன்மீக வாதிகள் அக்கினிமயலிங்கமாக தரிசிப்பார்கள். 

இதை நிகழ்வு எப்படி அறிவியல்யுடன் ஓத்துப் போகிறது என்பதை பார்ப்போம்.

சொக்கப்பனை அறிவியலா? எப்படி

கார்த்திகை மாதம்பருவமழையின் உச்ச காலம் சாகுபடி எல்லாம் முடிந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கும் இந்த நேரத்துல விவசாயிகளுக்கு பூச்சிகளால் தான் பிரச்சனை. அதை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாத நிலையில் இதை போன்ற சொக்கப்பனை கொளுத்துவதால் அதுவும் முன் இருட்டில் தாய் அந்துபூச்சிகள் வெளச்சத்தை நோக்கி சாரை சாரையாக வந்து மாட்டிக் கொள்ளும். 

கூட்டுப்புழுக்களிலிருந்து வரும்தாய் அந்துப்பூச்சி வருகின்ற காலமிது அது முட்டையிட்டு அவற்றிலிருந்து புழுக்கள் உருவாக்கி பயிர்களின் இலைகளை சேதப்படுத்தும் எனவே அந்த காலத்துல நம்முடைய முன்னோர்கள் அவற்றை தடுக்க ஓட்டு மொத்த மாக ஊர் கூடி இந்த சொக்கப்பனை கொளுத்துவார்கள். இன்றைய அறிவியலுடன் ஒப்பீட்டு பாரக்கும் போது இது ஓருங்கிணந்த பயிர்பாதுகாப்பு முறைகளில் ஓன்றான " விளக்கு பொறி" (LIGHT TROPS) நினைப்படுத்துகிறது ஓருங்கிணந்த பயிர்பாதுகாப்பு அம்சமாக விவசாயிகளுக்கு உதவிட ம் வகையில் இந்த நிகழ்வு சொக்கப்பானை கொளுத்துதல் உள்ளன. 

நம்முடைய முன்னோர்கள் அன்று செய்த செயல்கள் யாவும் இன்று ஏதோ ஒரு வகையில் அர்த்தமுள்ள தாக உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஓரு எடுத்து காட்டாகும் 

பனைஓலை யை எரிப்பதால் மனிதனுக்கு எந்த பாதிப்பும் இல்லை அந்த புகை பூச்சிகளை ஓட ஓட விரட்டும். 

மற்ற ஓலைகள் பச்சையாக இருக்கும் போது எரியாது ஆனால் பனை ஓலை எரியக்கூடியது அதனுடைய சாம்பலை எடுத்து பயிர்களின் மீது இன்றும் கூட விவசாயிகள் தூவுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். 

தீப திருநாள் உழவர்களுக்கு பயனுள்ள நாளாக , ஆன்மீக மும் அறிவியலும் கலந்த நாளாக நாம் பார்க்கிறோம்.


அக்ரி சு.சந்திர சேகரன்

வேளாண் ஆலோசகர்

அருப்புக்கோட்டை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%