கொட்டி வைத்த நெற்குவியல்.. குவிநதிருக்கும் செல்வம்.. கட்டி வைத்த மாடி மனை.. கட்டியவள் பெற்ற பிள்ளை.. உறவினத்தார்.. எட்டி நின்றே சென்றாரே.. என்றுணர்ந்தான் பட்டினத்தான்!
பட்டினத்தார் பாட்டெல்லாம் பாட்டு அல்ல.. பட்டுணர்ந்த அனுபவத்தின் சாறு.! பாமரர்கள் மனதுக்குள் படர்ந்திருந்த வேரு.. விட்டுவிட போகுதுயிர்.. சுட்டுவிடப் போகின்றார்
சுட்டியவன பட்டினத்தான் ஒருவன்.. அவன் சொற்களிலே இருக்கிறவன் இறைவன்!
ஆடும் வரை.. ஆடு என்று ஆடவிட்டு.. ஓடவிட்டு.. காடுவரை யாருயென்று கதறவிட்டு கண்ணீர் விட்டு.. செட்டி நாடுவிட்டு சென்னைவந்து ஒற்றியூரில்.. சிவனடியில் கலந்துவிட்ட. பட்டினத்தார் பாட்டுதானே.. பாட்டு! பட்ட அனுபவமே பட்டினத்தார்ப் பாட்டு.!
வே.கல்யாண்குமார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?