சொல்லாலே வரும் சோதனை

சொல்லாலே வரும் சோதனை


 தினம் தினம் நாம் காணும் மனிதர்களிடம் 

கேள்விகள் மூலம் நமக்கு பல பதில்கள்

கிடைக்கிறது 

ஆனால் பதில் என்று நாம் சொல்லுவது மனதில் இருந்து வருவதில்லை 

அந்த நேரம் தப்பித்துப் போக ஏதோ ஒன்று சொல்லி கடந்து போகின்றோம் அப்படியே மறந்து போகின்றோம் .


அந்த மனிதர் அதைக் கேள்வியை வைத்துக்கொண்டு திரும்ப திரும்ப நமக்கு சோதனைகள் தருவார் 


அந்த நேரங்களும் அந்த கேள்வி மீண்டும் மீண்டும் தேவையா ?


அது தேவை என்றால் அப்போதே 

பெற்று அன்றே முடித்து வையுங்கள். தேவையில்லை என்றால் அன்று அதனை முறித்து விலகுங்கள் .


உறவுகளும் நட்பும் ஆயிரம் இருக்கலாம் பழகும் மனிதர்களின் பாதிப்பு அதற்குள் இருக்கலாம். ஆனால் நமது நன்மை என்றோ அவர்களுக்கு அது தீமை என்றும் எவரும் புரிவதில்லை .


யாரிடமும் எதையும் நீ எதிர்பார்க்காதே எல்லோருமே மனிதர்கள் தான் யாரும் எங்கே கடவுளில்லை எல்லோருமே மனிதர்கள் தான் என்ற எண்ணம் வந்துவிட்டால் உன் எதிர்பார்ப்பு குறைந்துவிடும்


 எல்லோரையும் சமமாக பாவிக்க மனது வந்துவிடும் ..


அன்று புரிந்து கொள் இந்த வாழ்க்கை உதவி செய்வதற்கோ உதவி பெறுவதற்கு இல்லை வாழ்வதற்கு தான்


 உதவியும் உதவி செய்வதும் ஒரு பகுதி என மாற்றிக் கொள் மாற்றங்கள் உன்னை மாற்றி விடும் 


 யோசித்துப்பார் இந்த வாழ்க்கையில் உதவியாலா வென்றவர் யார்? என்று 


நம்பிக்கையில் வென்றவர் யார் என்று உனக்கே பதில் கிடைக்கும் கிடைத்த பதில் தான் உன் பாதை.


சொல்லாலே வரும் சோதனைகளை கடந்து உன் செயலால் வெற்றி என்னும் பாதையில் நடந்து வா ..



ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%