சொல்லி விடவா ...?

சொல்லி விடவா ...?



நீ முத்தமிடுவதற்க்காக 

சவரம் செய்த கன்னங்களிளெல்லாம் 

தோல்வியின் அடையாளமாய் 

முட்புதராய் 

மண்டிக்கிடக்கிறது தாடி !

தோற்றுப் போவதற்கு என் காதல் 

விளையாட்டும் அல்ல .

அழிந்து போவதற்கு என் காதல் 

உடலும் அல்ல 

காலம் எல்லாவற்றையும் மாற்றி விட்டாலும் 

கேடுகெட்ட சொந்தங்களால்

கை கூடா விட்டாலும் 

என்னை பொறுத்தவரை என் காதல் புனிதம் தான் !

உன் பெயர் என்னுள் துடிப்பது மட்டுமின்றி 

என்னை சுற்றியும் ஒலிக்க வேண்டுமடி !

எனக்கு பிறக்கப் போகும் மகளுக்கு நிச்சயம் 

உன் பெயர் சூட்டி 

உன் நினைவுகளால் நிச்சயம் காதலோடு வாழ்வேன் !

அடுத்த ஜென்மம் இருக்கா? 

இல்லையா ?

என்பது தெரியாது 

இருப்பது உண்மையென்றால்  

உன்னோடு வாழ தான் வரம் கேட்பேன் 

என் காதல் என் மனதோடும் -காற்றோடும் கரைந்து விடக் கூடாது 

என்றோ ஒரு நாள் 

என்னை அணு அணுவாய் திண்ணப் போகும் 

கரையான்களுக்கும் என் காதல் புரியாது .

சாவதற்குள் நிச்சயம் ஒரு நாள்  

உன்னை நேரில் பார்த்து சொல்ல வேண்டும் .

என் நெஞ்சுக்குள் உறங்காமல் இருக்கும் 

உனக்கான காதலை .

நான் வேறொருத்திக்கு "திரு "வாகவும்

நீ வேறொருத்தனுக்கு "திருமதி "யாகவும் 

மாறி போன பின்பு கூட

மாறவில்லை 

சொல்லாத என் பொல்லாத காதல் .

நிச்சயம் சொல்லி விடுவேன் 

மரணம் என்னை காதலிப்பதற்கு முன் !


-நௌஷாத் கான் .லி -

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%