
பிறருக்குக் கொடுப்பதையே மூன்றாய்க் கூறும்
பெருமைகொண்ட மொழியேதான் தமிழினி மையாம் !!
தருவதும்,கொடுப்பதும் மற்றும் ஈவதும்
தான்மூன்று சொற்களாம் பொருளது ஒன்றே !!
தருவதென்பது தாழ்ந்தவரே 'உயர்ந்தோர்க்'கொடுப்பது
தானாகக்கொடுப் பதுதனக்குச் 'சமமாய்'உள்ளோர்க்கு
பிறரைமூன்றாய்ப் பிரித்துப் பெரியோர் ' தாழ்ந்தோர்'
பெறுவதே ஈதலென்றுக் கூறுமொழி தமிழே !!
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%