சோழிங்கநல்லூர் யோக நரசிம்ம சுவாமி

சோழிங்கநல்லூர் யோக நரசிம்ம சுவாமி


     பக்த பிரகாலதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மனின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், ஜமத்கனி, அத்திரி, கவுதம், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவம் இருந்தனர்.

        இங்கு வந்து இவர்கள் தவம் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.

      ஒரு காலத்தில் விசுவாமித்திரர் 

இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிப்பட்டு "பிரமரிஷி "பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால்தான் அவர்கள் இங்கு 

தவம் இருந்தனர்.

     ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம் 

" இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை " என்றார்.

       அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் இரு அரக்கர்களுடன் 

சண்டை செய்ய அது முடியாமல் போனதால் ராமனை வழிப்பட்டு அவரிடம் இருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதனமூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்.

       இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், " நீ எனக்கு முன்பாக கையில் சங்கு, சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் போக்கி வா " என்று கூறினார்.

     அதன்படி ஆஞ்சநேயர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையில் " யோக ஆஞ்சநேயராக

 "சங்கு, சக்கரத்துடன் அருள் பாலித்து 

வருகிறார்.

  பொது தகவல் :

  சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். மலைக் கோயிலின் நீளம் 200 அடி. அகலம் 180 அடி.ஏறத்தாழ 1 ஏக்கர் பரப்பு 750அடி உயரத்தில் 1305

படிக் கட்டுகளோடு மலை மீது அமைந்துள்ள வனப்புடன் மிகுந்த தலம்.

    திறக்கும் நேரம் :

மலைக் கோயில்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை தரிசனம் செய்யலாம்.


தொகுப்பு 


M. ராதாகிருஷ்ணன்,

அஞ்சல் துறை (ஓய்வு )

வாணியம்பாடி -635 751

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%