
புதுடெல்லி: ஜப்பானின் யோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஹயா அலியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
38 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு சுமார் ரூ.13.29 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் ரெட்வுட் சிட்யில் நடைபெற்று வரும் சிலிக்கான் வேலி ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், 9-ம் நிலை வீரரான பிரான்ஸின் விக்டர் குரூயினுடன் மோதினார். இதில் அபய் சிங் 4-11, 2-11, 1-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?