பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!

பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!



அக்ரா: 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது.


2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் அக்​ரா​வில் கானா - கொமொரோஸ் அணி​கள் மோதின. இதில் கானா 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி தரப்​பில் முகமது குடுஸ் 47-வது நிமிடத்​தில் கோல் அடித்​தார்.


இந்த வெற்​றி​யின் மூலம் கானா அணி ‘ஐ’ பிரி​வில் 25 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றது. பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு தகுதி பெற்​றுள்ள 5-வது ஆப்​பிரிக்க அணி கானா ஆகும். அந்த வகை​யில் அல்​ஜீரி​யா, எகிப்​து, மொராக்​கோ, துனிசியா ஆகிய அணி​களும் தகு​தி பெற்​றுள்​ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%