தேசிய கூடைப்பந்து போட்டிக்கு எஸ்விஜிவி பள்ளி மாணவி தேர்வு
Oct 15 2025
10

மேட்டுப்பாளையம், அக். 13–
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு எஸ்விஜிவி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
13 வது வயதுக்கு உட்பட்ட 50வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி உத்திரகாண்ட் டேராடூனில் கடந்த 2025 அக்டோபர் 2 முதல் 10 வரை நடைபெற்றது.
இதில் காரமடை எஸ்விஜிவி பள்ளி மாணவி எம்.தக்க்ஷதா என்ற எட்டாம் வகுப்பு மாணவி தமிழ்நாடு பெண்கள் அணியில் கலந்து கொண்டு விளையாடி 3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் தங்கப்பதக்கத்தை வென்றார்.
தமிழ்நாடு அணிக்காக தனது பங்களிப்பை வழங்கி விளையாடிய நமது பள்ளி மாணவியை எஸ்விஜிவி பள்ளியின் தாளாளர் பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, பொருளாளர் ரத்தினசாமி, செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, ராஜேந்திரன், வேலுச்சாமி, நிர்வாக அலுவலர் சிவ சதீஷ்குமார் ஆகியோர் பொன்னாடை மற்றும் தங்கப் பதக்கத்தை வழங்கிப் பாராட்டினர். மேலும் கூடைப்பந்து பயிற்சியாளர்கள் மாரியப்பன், காயத்ரி மற்றும் ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?