ஜல் ஜீவன்’ திட்டத்தில் முறைகேடு: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.129 கோடி அபராதம்
Nov 28 2025
21
ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவின் பேரில் ரூ.129 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
‘இல்லம்தோறும் குழாய் இணைப்பு’ என்ற முழக்கத்தில் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் திட்டமான ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.இதற்கிடையே இந்த திட்டத்தின் பணிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வந்தது. சில மாநிலங்களில் பல முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது குஜராத், மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, திரிபுரா, அசாம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 7 மாநிலங்களில் முறை கேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தர விட்டார்.
இதனைத்தொடர்ந்து அந்த மாநிலங்களுக்கு ரூ.129 கோடியே 67 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்துக்கு ரூ.120 கோடியே 65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராஜஸ்தானுக்கு ரூ.5.34 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.2 கோடியே 2 லட்சமும், திரிபுராவுக்கு ரூ.1 கோடியே 22 லட்சமும், கர்நாடகத்துக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சமும், அசாம் மாநிலத்துக்கு ரூ.5 லட்சத்து 8 ஆயிரமும், தமிழ்நாட்டுக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப் பட்டது. இதனை உடனடியாக வசூலிக்கவும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்பேரில் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.6 கோடியே 65 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக ரூ.12 கோடியே 95 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்து உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?