மராட்டிய மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,800 கோடி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மராட்டிய மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,800 கோடி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்



மராட்டிய மாநில மெட்ரோ ரெயில் திட்டத்தை ரூ.9,800 கோடியில் நிறைவேற்ற மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டங்களில் 4 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த 4 திட்டங்களும் ரூ.19 ஆயிரத்து 919 கோடி மதிப்பிலானவை ஆகும்.


இதுகுறித்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று விரிவாக எடுத்துரைத்தார்.


அதில் முக்கியமானது பூமியில் கிடைக்கும் அரிய நிரந்தர காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டமாகும். இந்த திட்டம் ரூ.7,280 கோடி மதிப்பிலானது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் டன் காந்தத்தை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.


மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, தொழில்துறை பயன்பாடுகள் மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்கள் ஆகியவற்றின் தேவை வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக மந்திரி தெரிவித்தார். இந்த திட்டத்தின் மொத்த காலம் 7 ஆண்டுகள் ஆகும். இதில் ரூ.750 கோடி மூலதன மானியமாக அடங்கி உள்ளது.


மந்திரி சபை ஒப்புதல் கொடுத்த அடுத்த முக்கியமான திட்டம் புனே மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட திட்டமாகும். இந்த திட்டம் ரூ.9,858 கோடி மதிப்பிலானது.அடுத்ததாக குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 2 ரெயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%