ஜார்க்கண்ட்டில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு 8ம் தேதி வரை விடுமுறை

ஜார்க்கண்ட்டில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு 8ம் தேதி வரை விடுமுறை


ராஞ்சி,


டெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் உள்படல் பல்வேறு வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடும் குளிருடன் பல மாநிலங்களில் பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் நிலவி வரும் கடும் குளிர், பனி மூட்டம் காரணமாக அம்மாநிலத்தில் வரும் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிர் காரணமாக மாணவ, மாணவியர் நலன் கருதி வியாழக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டபோதும் ஆசியர்கள், பள்ளி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் , கற்பித்தல் பணி அல்லாத இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிடுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%