
திருச்சியின் நெரிசலான சாலையோரத்தில் இருந்த குணசேகரின் சிறிய உணவகம், எப்போதும் கூட்டம் குறையாதது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் எல்லோரும் ஜிகர்தண்டா- வைத்தான் ரசித்து குடிப்பார்கள்.
“நல்லா போகுதுங்க, ஆனா இன்னும் கொஞ்சம் வியாபாரம் பெருசா ஆகணும் …” என மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தார் கடை முதலாளி குணசேகர்..அந்த நேரம் பம்பரம் போல சுழன்று வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்கள் கொண்டு வந்துகொண்டிருந்த ரமேஷ் அருகே நின்று,
“அண்ணா, ஒரு யோசனை சொல்லலாமா?” என்றான்.
“சொல்லப்பா…” என குணசேகர் சிரித்தார்.
“ஜிகர்தண்டாவுக்கு இரண்டு வகை வைக்கலாம்னு நினைக்கிறேன். ஒன்று சாதாரணம். இன்னொன்று பெரிய கண்ணாடி கோப்பைல “ ஸ்பெஷல் ஜிகர்தண்டா.” பெயரே கேக்கும் போது வித்தியாசமா இருக்கும். எல்லோரும் ஸ்பெஷல்தான் கேட்பாங்க.”
குணசேகரின் கண்கள் பிரகாசித்தன. “சரி, நாளையிலிருந்து அப்படியே பண்ணலாம் ரமேஷ்!”
அடுத்த நாள் முதல் உணவக பலகையில் புதிதாய் இரண்டு பெயர்கள் தோன்றின:
சாதா ஜிகர்தண்டா ஸ்பெஷல் ஜிகர்தண்டா
அழகான கண்ணாடிக் கோப்பையில், மேலே நன்கு அலங்கரிக்கப்பட்ட “ஸ்பெஷல் ஜிகர்தண்டா வந்ததும், கூட்டம் குவிந்தது.
“சார், உங்களுக்கு சாதாவா? ஸ்பெஷலா?” என்று ரமேஷ் கேட்டவுடனே, குடும்பத்தார் ஒருமனதாக “ஸ்பெஷல்!” என்றார்கள்.
காதலர்கள் இருவரும் சிரித்துக்கொண்டு “ஸ்பெஷல் தாங்க!” என்று ஆர்டர் செய்தனர்.
மாணவர்கள் கூட சிரித்துக்கொண்டு, “”சாதா வாங்கினா கேவலமா இருக்கும் ஸ்பெஷல் வாங்கலாம்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
சில ரியல் எஸ்டேட் நண்பர்கள் கூட
“”எங்களுக்கு ஸ்பெஷல் தாங்க!” என்று சொல்லி பெரிய கண்ணாடியிலே குடித்தார்கள்.
சில நாட்களில் வியாபாரம் பறக்கத் தொடங்கியது. உணவகம் சலசலப்போடு நிரம்பியது.
முதலாளி குணசேகர் மகிழ்ச்சியுடன் ரமேஷை அழைத்து,
“நீ தான் இந்த கடைக்கு லட்சுமி மாதிரி. உன் யோசனைதான் இந்த வியாபாரத்தை மேலே கொண்டு வந்தது. இனிமேல உனக்கு ஊதியம் உயர்வு!” என்றார்.
ரமேஷின் முகத்தில் பெருமிதம் பொங்கியது. அந்த உணவகம் ஜிகர்தண்டா ஸ்பெஷல் என்ற பெயரிலேயே நகரமெங்கும் பிரசித்தி பெற்றது. ஆனால் ரமெஷ் க்கும் குணசெகருக்கும் மட்டுமே தெரியும் சாதா வுக்கும் ஸ்பெசலுக்கும் கண்ணாடி கிளாஸ் மட்டும் தான் வித்தியாசம் என்பது.. போலி பெருமை ஆடம்பரம் பேசும் மணிதர்களுக்கு இது தேவை தான் என ரமேஷ் மனதில் நினைத்துக்கொண்டான்
-ஜனனி அந்தோணி ராஜ்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?