கணக்கு டீச்சர்

கணக்கு டீச்சர்

😁நண்பர் ஒருவரை காலைல பார்த்தேன்.


டல்லா இருந்தார் .


😁"என்னங்க டல்லா இருக்கீங்க?"


😁" ஒன்னுமில்ல நேத்து கோவில்ல 108 அங்கப்ரதட்சணம் செய்தேன் "


😁" உடம்பு வலி டயர்டாக இருக்கிறதால் சோர்வாக இருக்கீங்களா ?" என்றேன்.


😁"இல்லங்க..108 தடவ உருண்டு முடிச்சிட்டு சாமிகிட்ட வேண்டிகிட்ட போது தப்பா வேண்டிகிட்டேன் " என்றார்.


😁"அப்டி என்ன தவறுதலா வேண்டிக் கிட்டீங்க ?"


😁" என் கணக்கு டீச்சர் என்னைத் திட்டக் கூடாதுன்னு வேண்டிகிட்டேன் " என்றார்..


😁இவர் என்ன லூசா ? 108 தடவ கஷ்டப்பட்டு உருண்டுட்டு கணக்கு டீச்சர் திட்டக்கூடாதுன்னு வேண்டி இருக்காரே என்று சிரித்துக் கொண்டே " என்னங்க என்னிக்கோ ஸ்கூல்ல படிச்ச கணக்கு டீச்சர் திட்டக் கூடாதுன்னு வேண்டிகிட்டு வந்திருக்கீங்க" லூசுத்தனமா இருக்கே " என்றேன்.


😁" ஆமாங்க லூசுத்தனமா வேண்டிகிட்டேன்..கணக்கு டீச்சர் அடிக்க கூடாதுன்னு வேண்டி இருக்கணும் " என்றார் மிக சோகமாக..


😁எனக்கு கடுப்பாயிடுச்சு " நீங்க நிஜமாவே லூசா ..கணக்கு டீச்சர் திட்டினா என்ன அடிச்சா இப்ப என்ன ..எதுக்கு இப்டிலாம் கஷ்டப்பட்டு வேண்டிக்கணும் " என்றேன்.


😁" நீங்க வேற .அந்த கணக்கு டீச்சர் என் பொண்டாட்டி தான்யா " என்றார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%