லக்அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் ஆந்திராவை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழ்நாடு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் 40-வது நிமிடத்தில் எஸ்.தர்ஷினியும், 55-வது நிமிடத்தில் அன்விதா ரகுராமனும் கோல் அடித்து அசத்தினர். தமிழ்நாடு அணி தனது அடுத்த ஆட்டத்தில் (22ம் தேதி) அருணாச்சலபிரதேச அணியுடன் மோதுகிறது
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%