சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-16 என்ற செட் கணக்கில் 9-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகாவையும், லக்ஷயா சென் 21-17, 13-21, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் ஷி யு ஜென்னையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
அதேவேளையில் ஹெச்.எஸ்.பிரனாய் 19-21, 10-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஃபர்ஹான் ஆல்வியிடமும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 20-22, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷோகோ ஒகாவாவிடமும் தோல்வி அடைந்தனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-11 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சு சிங் ஹெங், வூ குவான் சுன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.
டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார் திக்ஷா தாகர்
டோக்கியோ: டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான கோஃல்ப் போட்டியில் இந்தியாவின் திக்ஷா தாகர் தங்கப் பதக்கம் வென்றார்.
2017ம் ஆண்டு டெஃப் ஒலிம்பிக்ஸில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியின் போது வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த திக்ஷா தற்போது தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 50 மீட்டர் புரோன் ரைபிள் பிரிவில் இந்தியாவின் மஹித் சாந்து 246.1 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். செக் குடியரசின் எலிஸ்கா ஸ்வோபோடோவா 247.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். நடப்பு டெஃப்ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா இதுவரை துப்பாக்கி சுடுதலில் மட்டும் 12 பதக்கங்கள் வென்றுள்ளது.
இதில் மஹித் சாந்து வென்ற 3 பதக்கங்களும் அடங்கும். அவர், 10 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவில் தங்கமும், 10 மீட்டர் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?