டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியீடு!
Sep 30 2025
36

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று(செப். 28) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான பதவிகள்) மற்றும் 2 ஏ நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான தோ்வு நடைபெற்றது.
எழுத்துத் தேர்வை 4,18,791 பேர் எழுதியதாகவும், 1.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்றும்,முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
மேலும், “குரூப் 4 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2026-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி-யின் காலஅட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?