
சென்னை, செப். 25–
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதனிடையே, டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் செங்கோட்டையன் சந்தித்தார்.
இந்த நிலையில், திடீர் பயணமாக கோவையில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக தகவல்கள் பரவியது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:–
சென்னையில் எனது மனைவி சிகிச்சைப் பெற்று வருகிறார். அதற்காகதான் நேற்று சென்னை வந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. நேற்று அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பு பணிக்காக பல்வேறு நண்பர்கள் என்னுடன் பேசியுள்ளனர்.
அனைவரின் மனதிலும் ஒருமித்த கருத்துகள் இருக்கின்றன. யார் என்னிடம் பேசினார்கள் என்பதை வெளியிட முடியாது? இன்று வரை நான் கூறியதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது, அனைவருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை பிரதிபலிக்கிறது என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?