டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணி.
Sep 16 2025
79

டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி
பனை விதைகள் சேகரிப்பு வாரம் செப்டம்பர் 2025 14-ம் தேதி முதல் செப்டம்பர் 20 தேதி நாள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில்
ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பனை விதைகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
பணியினை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் இயக்குனரகம் அறிவுறுத்தலின்படி திருவாரூர் வ.சோ.ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை கப்பல் படைப் பிரிவு மாணவர்கள் பனை விதைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
நிகழ்வின்போது பள்ளி செயலர் முனைவர் எம். வி. பாலசுப்பிரமணியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன் என்சிசி முதன்மை அதிகாரி ஆர்.சதீஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
சேகரிக்கப்பட்ட பனை விதைகளை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வனத்துறை மற்றும் கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் பனை விதைகள் நடும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?