செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம்
Sep 16 2025
47

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். நிறைவாக தலைமை ஆசிரியர் முத்துலட்சுமணன் ஓசோனின் முக்கியத்துவத்தை பற்றியும், ஓசோனை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிறைவாக பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மனோகரன், லாவண்யா, வெங்கடேஷ்பிரபு , திருமலை, அலுவலக பணியாளர்கள் மணிவண்ணன், அரசு ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%