
டெல்லியில் நூற்றாண்டு நிறைவு விழாவில் அஞ்சல் தலை வெளியீடு
‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல’’: பிரதமர் மோடி
புதுடெல்லி, அக்.1–
டெல்லியில் இன்று நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார். அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல என்று மோடி கூறினார்.
மகாராஷ்டிராவின் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார், கடந்த 1925ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை துவங்கினார். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற இருக்கின்றன.
டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர்.எஸ்.எஸ். நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதில் தலைமை விருந்தினராக மோடி பங்கேற்றார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில்பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அநீதிக்கு எதிரான நீதி
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:–
‘‘ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. 100 ஆண்டுக்கால பயணம் முன்னோடியில்லாதது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி இது. 100 ஆண்டு கால மகத்தானப் பயணம் தேசத்தின் வளர்ச்சியை கட்டியெழுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம்.
நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராகக் கொண்டவன் தான். பொய்க்கு எதிரான உண்மை; அநீதிக்கு எதிரான நீதி; இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி நாள். நாளை விஜயதசமி பண்டிகை; தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்ற நாள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?