தாம்பரத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் மோதல்; ஓட்டுநர் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

தாம்பரத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் மோதல்; ஓட்டுநர் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை



தாம்​பரம்: தாம்​பரத்தை அடுத்த குறிஞ்சி நகர், வி.ஜி.என். குடி​யிருப்​பில் நேற்று முன்​தினம் இரவு காலி இடத்​தில் தலை, முகம், கைகளில் பலத்த வெட்டு காயங்​களு​டன் இளைஞர் ஒரு​வர் கொலை செய்​யப்​பட்டு கிடப்​ப​தாக தாம்​பரம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. உடனே போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து விசா​ரணை நடத்​தினர்.


இளைஞரின் உடலை மீட்டு தாம்​பரத்​தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து அருகே நின்​றிருந்த ஆட்​டோவை சோதனை செய்த​தில் அதில் ரத்​தக்​கரை இருந்​தது தெரிந்​தது. தொடர் விசா​ரணை​யில் கொலை செய்​யப்​பட்ட இளைஞர், குரோம்​பேட்​டை, துர்கா நகரை சேர்ந்த வினோத்​கு​மார் என்​கிற ஆத்தா வினோத் (28) என்​பது தெரிய​வந்தது.


ஆட்​டோ ஓட்​டுந​ரான இவர் மீது, சங்​கர் நகர், குரோம்​பேட்​டை, தாம்​பரம் காவல் நிலை​யங்​களில் அடிதடி வழக்​கு​கள் இருப்​பதும் தெரிய​வந்​தது. அப்​பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​த​போது வினோத்தை பம்​மல் நாகல்​கேணி பகுதி​யில் உள்ள டாஸ்​மாக் கடை​யில் இருந்து 5 பேர் கொண்ட கும்​பல் ஆட்​டோ​வில் கடத்தி வந்து கொலை செய்​தது தெரிய​வந்​தது. மேலும், வினோத் சமீபத்​தில் புதி​ய​தாக ஆட்​டோ வாங்கி தாம்​பரத்​தில் ரயில் நிலை​யத்தை ஒட்​டி​யுள்ள ஸ்டாண்​டில் போட்டு ஓட்டி வந்​துள்​ளார்.


ஆட்டோ ஸ்டாண்​டில் ஆட்​டோவை நிறுத்த வேண்​டும் என்​றால் சங்​கத்​துக்கு டெபாசிட் கட்ட வேண்​டும். சங்​கம் சொல்​வதைத்தான் கேட்க வேண்​டும் என்று நிர்​வாகி​கள் கூறிய​தாக​வும் அதை வினோத் கேட்​க​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இதனால் ஏற்​பட்ட தகராறு, முன்​விரோத​மாக மாறி வினோத் கொலை செய்​யப்​பட்​டது முதல் கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. தாம்​பரம் போலீஸார் ஆட்​டோ ஸ்டாண்டை சேர்ந்​த 5 பேரை​ வி​சா​ரிக்​கின்​றனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%