டெல்லி கார் குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மேலும் ஒருவர் கைது
Nov 28 2025
21
டெல்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரெயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10ம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
.குண்டுவெடிப்புக்கு தொடர்புடைய புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முசாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத் உள்பட 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக் காவலில் வைத்துள்ளனர். இந்த நிலையில் அரியானா மாநிலம், பரிதாபாத்தைச் சேர்ந்த சோயப் சாஹிப் என்ற நபரை என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள சோயப், உமர் நபி தங்குவதற்கு அடைக்கலம் அளித்து, அவர் பொருள்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?