டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய மருத்துவர்கள்


டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடம்.

புதுடெல்லி: வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

டெல்​லி​யில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் அகமது நபி என்றும் அவர் தற்​கொலைப் படை தாக்​குதல் நடத்​தி​யிருப்​பதும் முதல்​கட்ட விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.


அவர்​கள் வெடிபொருளை சேகரித்​தது தொடர்​பாக தேசிய பாது​காப்பு அமைப்பு (என்​ஐஏ) தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுகுறித்து என்ஐஏ மூத்த அதி​காரி​கள் கூறிய​தாவது: தற்​கொலைப் படை தீவிர​வா​தி​யான மருத்​து​வர் உமர் அகமது நபி மற்​றும் அவரது நெருங்​கிய நண்​பர்​களான மருத்​து​வர்​கள் முஜம்​மில் ஷகீல், ஆதில், ஷாகின் ஆகியோர் இணைந்து வெடிபொருள் வாங்க ரூ.26 லட்​சத்தை திரட்டி உள்​ளனர்.


இவர்​கள் 26 குவின்​டால் என்​பிகே உரத்தை ரூ.3 லட்​சத்​துக்கு வாங்கி உள்​ளனர். ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம், நூ ஆகிய நகரங்​களில் இருந்து என்​பிகே உரத்தை பெற்​றுள்​ளனர். சுமார் 2 ஆண்​டு​களாக என்​பிகே உரம் என்ற பெயரில் வெடிபொருட்​களை தயார் செய்து உள்​ளனர். மருத்​து​வர்​கள் என்​ப​தால் யாருக்​கும் எந்த சந்​தேக​மும் எழவில்​லை. ஒரு சிலர் கேள்வி எழுப்​பிய​போது, காஷ்மீரில் எங்​களுக்கு வேளாண் நிலம் இருக்​கிறது. அதற்​காக உரங்​களை வாங்கி வரு​கிறோம். இவற்றை காஷ்மீருக்கு கொண்டு செல்​வோம் என்று கூறி​யுள்​ளனர்.


வெடிபொருட்​கள் தயாரிப்​பு, வெடிபொருள் கடத்​தல் தொடர்​பாக பிரத்யேக செயலி வாயி​லாக 4 மருத்​து​வர்​களும் நாள்​தோறும் தகவல்​களை பரி​மாற்​றம் செய்​துள்​ளனர். கடந்த ஜனவரி மாதத்​தில் மருத்​து​வர் உமர் அகமது நபி பலமுறை செங்​கோட்டை பகு​தி​யில் நோட்​ட​மிட்டு உள்​ளார். இதற்​கான சிசிடிவி ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ளன.


கடந்த ஆண்டு டிசம்​பர் 6-ம் தேதியே (பாபர் மசூதி இடிப்பு தினம்) டெல்​லி​யில் தாக்​குதல் நடத்த உமர் அகமது நபி சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​தார். ஆனால் பலத்த பாது​காப்பு காரண​மாக அவரால் தாக்​குதலை நடத்த முடிய​வில்​லை. தற்​போது சக மருத்​து​வர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்ட நிலை​யில், உமர் அகமது நபி டெல்​லி​யில் தற்​கொலை படை தாக்​குதலை நடத்தி உள்​ளார்.


வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​களும் யாரிடம் இருந்து நிதி​யுதவி​களை பெற்​றனர் என்​பது குறித்து அமலாக்​கத் துறை தனி​யாக விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுதொடர்​பான தகவல்​கள் கிடைத்​த​பிறகு நிதி​யுதவி அளித்​தவர்​கள் வி​சா​ரணை வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​படு​வார்​கள்​ இவ்​வாறு என்​ஐஏ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%