சில்ஹெட்,
வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
அதன்படி வங்காளதேசம் - அயர்லாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 92.2 ஓவர்களில் 286 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 60 ரன்கள் சேர்த்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 301 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்களும், கேப்டன் ஷாண்டோ 100 ரன்களும் குவித்தனர்.
இதனை தொடர்ந்து 301 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 70.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சில் 254 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அயர்லாந்து தரப்பில் ஆண்டு மெக்பிரைன் 52 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் ஹசன் முரத் 4 விக்கெட்டுகளும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வங்காளதேச வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?