டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கெடிகாரம்: எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?

டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தங்க கெடிகாரம்: எவ்வளவு ஏலம் போனது தெரியுமா?



இந்த கெடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

லண்டன்,


இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்த கப்பல் பனிப்பாறையில் மோதியது. உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.


இதற்கிடையே அந்த கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அந்தவகையில் அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கெடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது.


இந்த கெடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப்பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%