
சென்னை, செப். 16–
தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
கடந்த 6ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்து, ஒரு சவரன் ரூ.80,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் 9ந்தேதி ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்தை தாண்டியது. 12–ந்தேதி ரூ.81,920க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த 3 நாட்கள் தங்கம் விலை சற்று குறைந்து, நேற்று ஒரு சவரன் ரூ.81,860க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,44,000-க்கும் விற்பனையாகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?