தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தது: இன்றைய சந்தை நிலவரம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தது: இன்றைய சந்தை நிலவரம்


 

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என இன்று (ஜன.16) குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4,000 என சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை அதிகரித்து வரு​கிறது. சில நேரங்​களில் தங்கம் விலை குறைந்​து, மீண்​டும உயர்​கிறது. இந்நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜன.15) பவுனுக்கு ரூ.80 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,06,320 என்ற புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது.


இந்நிலையில், சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு ரூ.480 குறைந்​து, ரூ.1,05,840-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்​கம் ரூ.60 குறைந்து, ரூ.13,230-க்கு விற்​பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்​கம் பவுன் ரூ.1,15,464-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.88,400-க்கும் விற்பனை ஆகிறது.


அதே​நேரத்​தில், வெள்ளி கிரா​முக்கு ரூ.4 குறைந்து , ரூ.306-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.3,06,000-க்​கும் சந்தையில் விற்​பனை ஆகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%