சென்னை, ஜன.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி மதிப்புமிக்க இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) 21வது ஆண்டு வங்கி தொழில்நுட்ப விருதுகள் 2024-25 விழாவில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் அதன் தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெரிய வங்கிகள் பிரிவில் ஐந்து விருதுப் பிரிவுகளில் இது கௌரவங்களைப் பெற்றுள்ளது; இதில் நான்கு விருதுகளையும் ஒரு சிறப்பு அங்கீகாரத்தையும் வென்றுள்ளது.
சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் பயன்பாடு, சிறந்த ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் கட்டண முறை பயன்பாடு, சிறந்த தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை மற்றும் சிறந்த தொழில்நுட்பத் திறமை. கூடுதலாக, சிறந்த தொழில்நுட்ப வங்கிப் பிரிவில் இந்த வங்கிக்கு ஒரு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தச் சாதனை குறித்துப் பேசிய பேங்க் ஆஃப் பரோடாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தேபதத்தா சந்த், "இந்திய வங்கிகள் சங்கத்திடமிருந்து இந்த மதிப்புமிக்க விருதுகளைப் பெறுவதில் பேங்க் ஆஃப் பரோடா பெருமை கொள்கிறது. இது புத்தாக்கம், வலுவான இடர் மேலாண்மை மற்றும் ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதைப் பிரதிபலிக்கிறது என்றார்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கி அனுபவத்தை வழங்கவும், பங்குதாரர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்கவும், மேம்பட்ட, எதிர்காலத்திற்குத் தயாரான திறன்களில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம்" என்றும் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?