தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிரை சூழ்ந்த மழைநீர்
தஞ்சாவூர் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடங்கி இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிரை மழைநீர் சூழ்ந்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோ ரப் பகுதிகளில், உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமான டிட்வா புயலால் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. மேலும், கடலோர பகுதிகளில் அதிக அளவிலான தரைக்காற்று வீசியது. மழை மற்றும் புயல் வந்தால் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வா கம் சார்பில் 66 குழுக்கள் அமைக்கப் பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தாலுகாக்கள் மிகவும் பாதிக்கப்படும் என கண்ட றியப்பட்டுள்ளன. அத்துடன் 24 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 14 முகாம்கள் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளன. மீனவர்கள் பாதிப்பு அதிராம்பட்டினம், மல்லிபட்டி னம் பகுதியில் மீன்பிடி துறைமுகங் கள் உள்ளன. இதில் சுமார் 200 விசைப்படகுகள், 2,000-க்கும் மேற் பட்ட பைபர் மற்றும் பாரம்பரிய நாட்டுப் படகுகள் உள்ளன. 32 மீனவர் கிராமங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை, வங்கக்கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு காரணமாக, கடந்த 22 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், படகுகளை கரையில் நிறுத்தி வைத்து பாதுகாத்து வரு கின்றனர். இதனால், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்க ளில் மீனவர்களுக்கு நிரந்தரமாக நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பா, தாளடி பாதிப்பு அம்மாபேட்டை அருகே புத்தூர், பல்லவராயன்பேட்டை, உக்கடை, சேர்மாநல்லூர், சாலியமங்கலம், களஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிரை மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழைநீர் நெற்பயிரை சூழ்ந்துள்ளதால், அவை அழுகும் நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் ஒரத்தநாடு பகுதியிலும் மழைநீர் சம்பா, தாளடி வயலில் தேங்கி யுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிரை மழைநீர் சூழந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மின்சாரம் தாக்கி கால்நடை உயிரிழப்பு பேராவூரணி அருகே, பைங்கால் உக்கடை கிராமத்தைச் சேர்ந்த பழனி வேலின் பசு மாடு ஒன்றும், சிந்தா மணி என்பவரின் ஆடு ஒன்றும், மழை யினால் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் உயி ரிழந்தன. இதேபோல், திருவோணம் அருகே கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த தேவநேசன் என்பவரின் கறவை மாடு, மழையினால் ஏற்பட்ட குளிர் தாங்காமல் உயிரிழந்தது. இத னால் விவசாயிகள் வேதனைய டைந்தனர். வருவாய்த் துறை மற்றும் கால்நடைத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவையாறு அருகே மகாராஜ புரம் கிராமத்தில் பழமையான புளிய மரம் ஒன்று முறிந்து அருகில் இருந்த பன்னீர்செல்வம் என்பவரது குடிசை வீட்டின் மீது விழுந்ததில் குடிசை வீடு சேதமானது. இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.