கொள்ளையர்களை மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு
கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய கொள்ளையில் மூன்று பேரை போலீசார் சுட்டு பிடித்த நிலையில், அதில் ஒருவர் மருத்துவம னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டம், கவுண்டம்பாளை யம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடி யிருப்பில் 13 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து குனியமுத்தூர் அருகே குளத்துப்பாளையத்தில் பதுங்கியி ருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்களை சனியன்று போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால், தற் காப்புக்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இதில் கால்களில் குண்டு பாய்ந்த மூவ ரும் படுகாயமடைந்த நிலையில், மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், ஆசிப் (28) என்பவர் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று உயி ரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த ஆசிப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறை யில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர் பாக போலீசார் மற்றும் நீதிபதி விசாரணை நடத்தவுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?