தந்திரம்

தந்திரம்



இலக்குகள் கண் காணா இடத்திலில்லை

கனவெல்லாம் கைக் கெட்டிய தூரத்திலே

நையாண்டி கேலி நக்கலைப் புறக்கணிப்பீர்

இலட்சிய வரைபடத்தை விட்டு விலகாதீர்


நற்கருத்துக்கள் கூற நண்பர்கள் உள்ளனர்

ஆழ யோசிக்க திறனுள்ள மூளை உண்டு


தோல்விகளைத் தாங்கும் பக்குவமிருக்கு

கவலைகளைத் தாங்கி இயங்கும் இதயம்


சீற்றத்தில் விழி சிவக்க ஆவேசப்படாதீர்

குழப்பம் நிலவும்போது முடிவெடுக்காதீர்


வெற்றி அரவணைக்க பணிவோடிருப்பீர்

சீதேவி உமை அகலாதிருக்கும் சூட்சுமம்



-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%