வேட்கை

வேட்கை


ஆகாய தேவதையின்

நீண்டநாள் வேட்கை

சிதறிக்கிடக்கும்

நட்சத்திர வெள்ளிப்

பாசிகளை மின்னல் நரம்பில் தங்கநிலா

டாலரோடு கோர்த்து

கழுத்தில் மாலையாய்

அணியாமல்

நெற்றியில் மட்டும்

சந்தனப்பொட்டை

வைத்துக்கொண்டாள்!


விபூதி துகள்களோ

சிந்திக்கிடக்கின்றன

ஆதவன் மேற்கில்

மறையும் அந்திப்பொழுதில்

குங்குமம் குவிந்து

கிடப்பதும் புலப்படவில்லையோ?!


ஆகாயத்தில் உருண்டை வெல்லத்தை யார் வைத்தது நட்சத்திர

எறும்புகள் கொஞ்சம் கொஞ்சமாய்த்தின்று

தீர்த்ததைதான்

பிறைமதி

என்கிறீர்களோ?!

தங்க உண்டியல் உடைந்து வெள்ளிக்காசுகள்

சிதறிக்கிடக்கின்றன!


கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%