தனிமையிலே இனிமை

தனிமையிலே இனிமை

 🌿


ஆசைகள் பேராசையாக அலைக்கழிக்கும் பெருங்கடல் வாழ்க்கை சுழலும் போது

கிடைக்காத தனிமை


சொல்லப்படாத வார்த்தைகள்

ரகசியங்களாய்...


கேட்பாரற்ற இசை

ஓசைகளாய்...


கொஞ்சநேரத் தனிமையில்,


சிந்தனைகள் சீரான

இசையாகி உள்ளம் 

ஆறுதலாய் மனக் கண்ணாடியில் சுயம் 

தெளிவாய் தெரியும்.


அசதி அடங்க,

அமைதி பரவி,

தியானம் மலரும்


தனிமையின் இனிமையில்


நிழலும் நண்பனாகி,

நினைவுகளே துணையாகும்


நா.பத்மாவதி

கொரட்டூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%